ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தமிழக அரசின் 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றததில் இன்று விசாரணை நடைபெறுகிறது..

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டின் கீழ், வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாமல் குறிப்பிட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது. தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என  சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Also Read:   கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: மத்திய அரசு ஆலோசனை!

அந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், மதுரையைச் சேர்ந்த அபிஸ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தமிழக அரசின் பதிலைப் பொறுத்துதான் 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டுமா இல்லையா என முடிவு செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் இந்த புதிய வழக்குகளும் பழைய மனுக்களோடு இணைத்து விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

First published:

Tags: OBC Reservation, Quota Bill, Supreme court, Vanniyar Reservation