Home /News /tamil-nadu /

ஆஹா!! ஒரே இடத்தில் 109 வகை பட்டாம்பூச்சிகளை பாக்கணுமா?.. பச்சமலைக்கு போங்க!

ஆஹா!! ஒரே இடத்தில் 109 வகை பட்டாம்பூச்சிகளை பாக்கணுமா?.. பச்சமலைக்கு போங்க!

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி

இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட ஆய்விலேயே 109 வகையான பட்டாம்பூச்சிகளை கண்டறிந்துள்ள நிலையில், மேலும் சில நாட்கள் ஆய்வை தொடர்ந்தால் 175 வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளை கண்டறிய வாய்ப்புள்ளதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பச்சமலை, பெயருக்கு ஏற்றார் போலவே கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேல் என காட்சியளிக்க கூடியது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் அமைந்துள்ள பச்சமலை, 19,076 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. ஆத்மார்த்தமான, தூய்மையான மூலிகை வாசனை, அருவி, மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம் என ஐம்புலனுக்கும் இன்பம் தரக்கூடிய பச்சை மலையை சுருக்கமாக பட்ஜெட்டுக்குள் அழகாக சுற்றுலா செல்ல விரும்புவோரின் சொர்க்கம் என சொல்லலாம்.

குறிப்பாக, பச்சமலையில் சிறகடித்து பறக்கும் விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசிப்பதற்காகவும், போட்டோ எடுப்பதற்காகவும் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் ஏராளம்.பச்சை கம்பளத்தை போர்த்தியது போன்ற வயல்வெளிகள், ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொட்டும் அருவி, நாசிக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை மணம் என இயற்கை எழில் சூழ்ந்த இடமாக பெயர் பெற்ற பச்சை மலை தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

திருச்சி வனக்கோட்டம் சார்பில் கடந்த வாரம் பச்சைமலை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், அரிய வகைகள் உட்பட 109 பட்டாம் பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருச்சி வனப் பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையிலான வனத்துறையினர், கோவையில் உள்ள தி நேச்சர் அண்ட் பட்டர்ஃபிளை சொசைட்டி (The Nature and Butterfly Society - டிஎன்பிஎஸ்) குழுவினருடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு செங்காட்டுப்பட்டி, மங்கலம் அருவி, செம்பகம் அருவி மற்றும் அவற்றிற்கு செல்லும் பாதைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்வதற்குப் பெயர்பெற்ற பொதுவான அல்பட்ராஸ் பட்டாம்பூச்சிகளும் பச்சமலை பகுதியில் காணப்படுகிறது


இந்த ஆய்வில் 109 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டு, புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து வகைகளும், ஆறு பெரிய பட்டாம்பூச்சி குடும்பங்களில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
இதில் ஸ்வாலோடெயில்ஸ், ஒயிட்ஸ் மற்றும் யெல்லோஸ், பிரஷ்-ஃபுட், ப்ளூஸ், மெட்டல்மார்க்ஸ் மற்றும் ஸ்கிப்பர்கள் ஆகியவை அடங்கும். 2016 கணக்கெடுப்பில் 105 இனங்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் வாசிக்க: புதுக்கோட்டையில் சிதிலமடைந்த நிலையிலிருக்கும் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்- மக்கள் ஆசை நிறைவேறுமா?

பல டைகர் மற்றும் காகம் வகையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள், பிரஷ்-ஃபுட் குடும்பத்தின் டானைனே (Danainae subfamily) துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற தகவல் ஆய்வு மூலம் கிடைத்துள்ளது. டார்க் புளூ டைகர், ப்ளூ டைகர், காமன் க்ரோ, டபுள் பிராண்டடு க்ரோ ஆகிய வகையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள், வடகிழக்கு பருவமழை வந்தவுடன் மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் நோக்கி இடம் பெயரத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்வதற்குப் பெயர்பெற்ற பொதுவான அல்பட்ராஸ் பட்டாம்பூச்சிகளும் பச்சமலை பகுதியில் காணப்படுகிறது.

இதையும் வாசிக்க: முந்திரி விற்பனையில் கலக்கும் ஆதனக்கோட்டை ஊர்.. புதுக்கோட்டை சென்றால் இதை மிஸ் செய்யாதீங்க

இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட ஆய்விலேயே 109 வகையான பட்டாம்பூச்சிகளை கண்டறிந்துள்ள நிலையில், மேலும் சில நாட்கள் ஆய்வை தொடர்ந்தால் 175 வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளை கண்டறிய வாய்ப்புள்ளதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பச்சை மலைப் பகுதியில் பல அரிதான பட்டாம்பூச்சி இனங்கள் காணப்படுவது ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான அறிகுறிகள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Salanraj R
First published:

Tags: Tamilnadu

அடுத்த செய்தி