எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி 108 பேர் பழனி கோவிலில் முடிக்காணிக்கை

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி 108 பேர் பழனி கோவிலில் முடிக்காணிக்கை

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி 108 பேர் பழனி கோவிலில் முடிக்காணிக்கை

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி பழனி முருகன் கோவிலில் 108 பேர் முடிக்காணிக்கை செய்துள்ளனர். 

  • Share this:
அ.தி.மு.க சர்பில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுக்களை  இன்று முதல் அளித்து வருகின்றனர். தமிழநாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது மனுக்களை பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் 15,000 ரூபாயும், புதுச்சேரியில் போட்டியிடவுள்ளவர்கள் 5,000 ரூபாயும், கேரளாவில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 2,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு பெறுவதை இன்று தொடங்கி வைத்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தலைமையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த 108 பேர் பழனி கோயிலில் முடிக்காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்த அவர்கள் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்தனர். முன்னதாக ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக அலுவலகத்தில் மொட்டை அடித்த 108 பேர்


பின்னர்,ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை குறிப்பிடும் விதமாக 73 கிலோ கேக்கை வெட்டினர். மேலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இலவச மருத்துவ முகாம் போன்றவற்றையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க...நெல்லையில் அரசு பள்ளியில் மாணவிகளின் ஊக்கத்தொகையில் மோசடி: நடவடிக்கை பாயுமா?

அதனைத் தொடர்ந்து அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். கட்சியின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர். அதேபோல கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரும் விருப்ப மனுக்களை பெற்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: