11 நாட்கள் மது விற்பனை - தமிழக அரசுக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு தெரியுமா?

கோப்புப் படம்.

கடந்த 16-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு 1062 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன.

    அதன்படி மே 7-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை 1362 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாகவும்,  இதனால் தமிழக அரசுக்கு 1062 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் இம்மாதம் 8-ம் தேதி முதல் சாதாரண மது வகைகள், குவார்ட்டர் பாட்டில், 10 ரூபாய் நடுத்தரம் மற்றும் உயர்தர மது வகைகள், குவார்ட்டர் பாட்டில் 20 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டதால் 4,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published: