• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீபாவளியன்று பட்டாசு வெடித்து தமிழகத்தில் 106 தீ விபத்துகள்.. கடந்த வருடத்தை விட விபத்துகள் அதிகரிப்பு..

தீபாவளியன்று பட்டாசு வெடித்து தமிழகத்தில் 106 தீ விபத்துகள்.. கடந்த வருடத்தை விட விபத்துகள் அதிகரிப்பு..

பட்டாசு வெடித்து தமிழகத்தில் 106 தீ விபத்துகள்

பட்டாசு வெடித்து தமிழகத்தில் 106 தீ விபத்துகள்

தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தீபாவளியின்போது அதிக அளவில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
காற்றுமாசு காரணமாக தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதால் மக்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அளவுக்கதிமாக பட்டாசுகளை வெடித்தனர். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தீபாவளியின்போது அதிக அளவில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தீபாவளி தினமான நேற்று சென்னையில் பட்டாசு வெடித்து 40 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 33 விபத்துகள் ராக்கெட் விட்டதாலும், 7 விபத்துகள் பட்டாசு வெடித்ததாலும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக 57 போன் கால்கள் தீயணைப்புத் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Also read: கேந்திரிய வித்யாலயாவில் தமிழ்மொழி மீது ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் - சீமான் எச்சரிக்கை

அதேபோல, தமிழகம் முழுவதும் நேற்று 106 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 84 விபத்துகள் ராக்கெட் விட்டதாலும் 22 விபத்துகள் பட்டாசு வெடித்ததாலும் ஏற்பட்டுள்ளது. 90 சதவிகித தீ விபத்துகள் இரவு 7 - 10 இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 30க்கும் குறைவான தீ விபத்துகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: