தமிழகத்தில் ஒரே நாளில் 10,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

தமிழகத்தில் ஒரே நாளில் 10,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

மாதிரி படம்

தமிழகத்தில் இதுவரை 1,85,299 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 10,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது, இதுவரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 85,299 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நேற்று 631 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் 64,400 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

  இதனைத் தொடர்ந்து, ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்து, 7 ஆயிரத்து 317 சுகாதாரப்பணியாளர் மற்றும் 3 ஆயிரத்து 92 முன்கள பணியாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 409 பேருக்கு செலுத்தப்பட்டது.

  119 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 22 முன்கள பணியாளர் என மொத்தம் 141 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்து என நேற்று மொத்தம் 10,550 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி, நேற்று ஒரு நாளில் 5.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க.... மேலும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

  தமிழகத்தில் இதுவரை 1,85,299 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, 23.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: