ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடா... 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடா... 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு இல்லை என்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லையென்றால் இலவச தொலைபேசி எண் 104-க்கு  புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  “தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என கூறினால், 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

  சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.  ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இந்த விழிப்புணர்வு மினி மராத்தானை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. 169 டன் பான்பாரக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் அண்டை மாநிலங்களிருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

  மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தாமல் ஆய்வு என்ற பெயரில் திமுக விளம்பர அரசியல் செய்கிறது - சீமான்

  தொடர்ந்து தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் , ’மருந்து தட்டுபாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. சந்தேகம் இருப்பவர்கள்  யார்வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் உள்ள 32 கிடங்குகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளன என்பதை அறியலாம். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

  மேலும் இதுதொடர்பான புகார் தெரிவிக்க 104 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் மருத்து இல்லை என 104-க்கு அழைத்து தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Health Minister, Tamilnadu govt