முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜல்லிக்கட்டு மரணங்கள்: 6 ஆண்டுகளில் 102 பேர் காளை முட்டி பலி.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜல்லிக்கட்டு மரணங்கள்: 6 ஆண்டுகளில் 102 பேர் காளை முட்டி பலி.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் 10 பேர் உயிரிழப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 6 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 102 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவைச்  சேர்ந்த எல்சா (ELSA) பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை காளைகள் முட்டியதில் 81 பார்வையாளர்கள், 21 மாடுபிடி வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இதற்கு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாததே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மஞ்சு விரட்டு, எருதாட்டம் ஆகிய போட்டிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்படுவதாக எல்சா பவுண்டேசன் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

First published:

Tags: Bull, Death, Jallikattu