எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு
மாதிரிப் படம்
  • Share this:
2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன், "தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களில் தமிழ் உச்சரிப்பில் இருந்து ஆங்கில உச்சரிப்பில் வேறுபாடு உடைய பெயர்களில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை ஆங்கிலத்தில் "Triplicane" என்று உச்சரித்து வந்த நிலையில் இனி அதை "Thiruvallikkeni" என்று உச்ச்ரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை என்பதை "Tondiyarpet" என்பதில் இருந்து "Thandaiyaarpettai" என்று திருத்தப்பட்டு உள்ளது. வ.உ.சி நகர் - "V.O.C Nagar" என்பது "VA.OO.SI Nagar" ஆகவும், எழும்பூர் - "Egmore" என்பது "Ezhumboor" ஆகவும் மாற்றப்பட்டு உள்ளது.


இதேபோன்று சென்னையின் பல பகுதியின் பெயர்களும், கடலூர், சிவகங்கை, தர்மபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், விழுப்புரம், சேலம், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,018 ஊர் பெயர்களிலும் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

பெயர் மாற்றப்பட்ட ஊர் விவரங்கள்:

திருவல்லிக்கேணி - Triplicane - Thiruvallikkeniதண்டையார்பேட்டை - Tondiyarpet - Thandaiyaarpettai
வ.உ.சி நகர் - V.O.C Nagar - VA.OO.SI Nagar
எழும்பூர் - Egmore - Ezhumboor
சிவகங்கை - Sivaganga - Sivagangai
தருமபுரி - Dharmapuri - Tharumapuri
பூவிருந்தவல்லி - Poonamallee - Poovirunthavalli
தாராபுரம் வடக்கு - Dharapuram North - Tharaapuram Vadakku
தூத்துக்குடி - Tuticorin - Thooththukkudi
திருவைகுண்டம் - Srivaikundam - Thiruvaikundam
செங்கல்பட்டு - Chengalpet - Chengalpattu
கோயம்புத்தூர் - Coimbatore - Koyampuththoor
ஆரணி - Arni - Aarani
சீர்காழி - Sirkali - Seerkaazhi
திருவில்லிபுத்தூர் - Srivilliputtur - Thiruvillipuththur
கரூர் - Karur - Karoor
விழுப்புரம் - Vilupuram - Vizhuppuram
திருவரங்கம் - Srirangam - Thiruvarangam
நாகர்கோயில் - Nagercoil - Nagerkovil
வேலூர் - Vellore - Veeloor
திண்டுக்கல் - Dindigal - Thindukkal

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading