• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பூண்டி ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆந்திர மாநிலத்தில் பெய்யும் கன மழையால், அங்குள்ள அம்மம்பள்ளி அணையிலிருந்து ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீரானது பூண்டி ஏரிக்கு பெருக்கெடுத்து வருவதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மொத்தம் 35 அடி உயரம் கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில், தற்போதைய நீர் மட்டம் 34 புள்ளி 2 அடியாக உயர்ந்துள்ளது. விநாடிக்கு 900 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இரு மதகுகள் வழியாக ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் ஆட்சியர், ஆல்பி ஜான் வர்கீஸ், நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். வங்கக் கடலில் உருவாகி நவம்பர் 25-ம் தேதி நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாள்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் விடாமல் மழை பெய்து வந்தது.

    இதனால் ஏரிகளுக்கான வரத்துக் கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரி 35 அடி கொள்ளளவு கொண்டதாகும். அதோடு 3231 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும். இந்த மழையால் பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய் மூலம் 5 ஆயிரம் கன அடிவீதம் நீர்வரத்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது.

    இதைத் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் தொடர் நீர் வரத்தால் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 33 அடியையும் எட்டியதோடு, 2500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தும், மழையும் பெய்தால் அடுத்து வரும் இரண்டு நாள்களில் முழு கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: