முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இனி 1,000 யூனிட் மின்சாரம் இலவசம்... நெசவாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!

இனி 1,000 யூனிட் மின்சாரம் இலவசம்... நெசவாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!

மாதிரி படம்

மாதிரி படம்

Electricity free | கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின்கட்டண சலுகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு 1,000 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசைத்தறிக்கு 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.

First published:

Tags: Electricity bill, Tamil Nadu, Tamil Nadu government