நியூஸ் 18 செய்தி எதிரொலி: முட்டுக்காடு நீர்நிலையிலிருந்து 1,000 டன் கழிவுகள் அகற்றம்
சென்னை முட்டுக்காடு உவர் நீர்நிலைப் பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த 1,000 டன் திடக்கழிவுகள் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டுள்ளன.

முட்டுகாடு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
- News18 Tamil
- Last Updated: October 18, 2020, 10:30 AM IST
கழிவுகள் கொட்டப்படுவது குறித்து திடக்கழிவு மேலாண்மைகுழு தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜோதிமணி முட்டுக்காடு நீர்நிலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை முட்டுக்காடு உவர் நீர்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளாலேயே திடக்கழிவுகள் கொட்டப்படுவதும் கழிவுநீர் கலக்கப்படுவது குறித்து நியூஸ் 18 செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுவின் தலைவரான ஜோதிமணி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து இயக்குனர் பழனிசுவாமி ஆகியோர் நேற்று முட்டுக்காடு நீர்நிலையை நேரில் பார்வையிட்டனர்.
நாவலூர், படூர், முட்டுக்காடு பஞ்சாயத்து சார்பில் மட்டும் 1,000 டன் திடக்கழிவுகள் 5 இடங்களில் இருந்து அகற்றப்பட்டிருந்தது. ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து முட்டுக்காடு நீர்நிலைக்கு குப்பை வண்டிகள் வரும் சாலைகள் அனைத்தும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு அடைக்கப்பட்டன. நேரில் ஆய்வு செய்த பின்னர் முட்டுக்காடு நீர்நிலையை தூர்வாருவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை தொடங்க வேண்டும்.
முட்டுக்காடு நீர்நிலையை அடையும் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டார்.