முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிகரிக்கும் காய்ச்சல் பரவல்... தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்து முகாம்கள்..!

அதிகரிக்கும் காய்ச்சல் பரவல்... தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்து முகாம்கள்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாடு முழுவதும் வரும் 10அம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இன்ஃப்ளுயன்சா H3N2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதே இதற்கு காரணம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்... இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க... மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, "தமிழ்நாடு முழுவதும் வரும் 10அம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் நடைபெறும்.  காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம் காலை 9 மணிக்குத் தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.

இது குளிர்காலம் மற்றும் பருவ மழைக்காலம் நிறைவடையும் போது ஏற்படும் வழக்கமாக காய்ச்சலாகும். உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் இதன் அறிகுறிகள். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த முகாம்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக மக்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாகக் கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது அவசியம். எனவே, 10ஆம் தேதி அன்று மக்கள் அனைவரும் முகாம்களில் பரிசோதனை செய்து தேவை இருப்பின் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

First published:

Tags: Fever, Ma subramanian