Home /News /tamil-nadu /

அதிகரிக்கும் காய்ச்சல்.. தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

அதிகரிக்கும் காய்ச்சல்.. தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பருவமழைக்கு முன்பாக இதுபோன்ற காய்ச்சல் வருவது வழக்கமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தின்போது காய்ச்சல் ஏற்படுவது சற்று அதிகரிக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தில் சளிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை ஒரே நாளில் 1000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் பாதிப்பு, சளி, இருமல் அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, ‘இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் சளிக் காய்ச்சல் பற்றி பேசப்படுகிறது. பருவமழைக்கு முன்பாக இதுபோன்ற காய்ச்சல் வருவது வழக்கமாக உள்ளது.

    பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு : இபிஎஸ் தரப்புக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்!

    பருவநிலை மாற்றத்தின்போது காய்ச்சல் ஏற்படுவது சற்று அதிகரிக்கும். எச்1என்1 பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரையில் 1,166 ஆக உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கூடுதல் முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாளை ஒரே நாளில் தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களை நடத்தவுள்ளோம்.

    இதில் பொதுமக்கள் வருகை தந்து காய்ச்சல் அல்லது அதற்கான பாதிப்பு இருந்தால் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    நேற்று அமெரிக்காவில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,5 கொரோனா அலைகள் ஏற்பட்டு விட்டன. அங்கு கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால் நாம் அப்படி ஏதும் சொல்லவில்லை.

    அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு... மாநில சுயாட்சி நிச்சயம் வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கொரோனா பாதிப்பு என்பது பல நிலைகளில், வைரஸின் உருமாற்றத்தை  பொருத்து காணப்படுகிறது. ஒமிக்ரான் வைரஸ் 7 நிலைகளில்தான் இருக்கும் என்று கூறினோம். அது தற்போது பல வித நிலைகளை அடைந்துள்ளது.

    கேரளாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 4-5 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 500-க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அச்சப்படத் தேவையில்லை’ என தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Fever, Ma subramanian

    அடுத்த செய்தி