குடும்பத் தலைவிகளுக்கு ₹ 1000 எப்போ தருவீங்க.. இல்லன்னா போராட்டம் வெடிக்கும் - அதிமுக எச்சரிக்கை

தமிழக அரசை எச்சரிக்கும் அதிமுக

சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய் திறக்காத தி.மு.க. அரசுக்குக் கண்டனம் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்.

 • Share this:
  குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையைக் காப்பது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

  Also Read:வேப்பமர வேரில் சிவலிங்கம்.. பக்தியுடன் வழிபாடு செய்த மீஞ்சூர் மக்கள்

  குடும்பத் தலைவிகளுக்கு ₹ 1000 எப்போது தருவீங்க..

  தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு, தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். தமிழ் நாடு அரசுக்கு எச்சரிக்கை தமிழ் நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும், மற்ற மகளிருக்கும் பலவகையான பணப் பயன்களை அளிப்பதாக திமுக வாக்குறுதி அளித்து, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

  Also Read:எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவோம் - அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

  குறிப்பாக, மகளிருக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும்; முதியோர் உதவித் தொகை 1,000/- ரூபாயில் இருந்து 1,500/- ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்று திருப்பி செலுத்தப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.

  தமிழ்நாட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தையும், பெண்களுக்கு அளித்த மற்ற வாக்குறுதிகளையும் திமுக அரசு விரைந்து செயல்படுத்தாவிட்டால், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடும், தாய்க்குலத்தின் பங்கேற்போடும், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைத்து நடத்தும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்களின் விலையை ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளைக் குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

  Also Read:சூது கவ்வும் பட பாணியில் கடத்தல் நாடகம் - போலீசிடம் வசமாக சிக்கிய போதை ஆசாமிகள்

  சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய் திறக்காத தி.மு.க. அரசுக்குக் கண்டனம் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்.

  தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு, தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

  விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்குக் காரணமான தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: