3ஆம் அலையை எதிர்கொள்ள 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அதற்கான தொகையை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது தொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நாளை கோவை மாவட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் தற்போதுதான் இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கி வருகிறது, தொற்றின் எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மீண்டும் பொதுமக்கள் சகஜ நிலைக்கு வர தொடங்கி விட்டனர், இருந்தபோதும் இன்னும் தமிழ்நாட்டில் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக அகலாத நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூன்றாவது அலைக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தயாராகி வருகிறது. அந்த அடிப்படையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர் கொரோனா 3 ஆம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதோடு, 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைகாக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டது என்றும், சென்னை மற்றும் மதுரையில் தலா 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்கான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Also read: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதற்கு எமர்ஜென்ஸியை மத்திய அரசு அறிவித்து விடலாம்: திருமுருகன் காந்தி

நேற்று தலைமை செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா 3ஆம் அலை தொடர்பாக பொதுமக்களுக்கு பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுக்குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஓரிரு தினங்களில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைப்பார் எனவும் குறிப்பிட்டார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25% தடுப்பூசிகளில், 10% மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அதற்கான தொகையை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது தொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நாளை கோவை மாவட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

Also read: கொங்குபகுதி மக்களின் தேவைகளை மாநில அரசு நிறைவேற்றுவதை பொறுத்தே கொங்கு நாடு விவகாரத்தில் நடவடிக்கை: வானதி சீனிவாசன்

மூன்றாவது அலை உருவானால் அதை தொடக்க நிலையிலிருந்து கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மூன்றாவது அலையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை இன்னும் மருத்துவ நிபுணர்கள் உறுதியாக கணிக்க முடியாத ஒரு சூழலில் அதற்கு அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக 3 வது அலைக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
Published by:Esakki Raja
First published: