Home /News /tamil-nadu /

புதுக்கோட்டையில் வீசிய சூறாவளிக்காற்று: 1000 ஏக்கர் வாழைகள் நாசம் - விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டையில் வீசிய சூறாவளிக்காற்று: 1000 ஏக்கர் வாழைகள் நாசம் - விவசாயிகள் வேதனை

வாழை விவசாயம்

வாழை விவசாயம்

மாங்காடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் நாசமடைந்துள்ளன. 

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த ஆயிரம் ஏக்கருக்கு மேலான வாழை பயிர்கள் அழிந்து நாசம் ஆனதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, வேங்கிடகுளம், கொத்தகோட்டை, வடகாடு, மாங்காடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 மாதங்களாக நிலவும் தொடர் ஊரடங்கு உத்தரவாதல் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி இருந்தது.

இந்த நிலையில் நேற்று வீசிய சூறாவளி காற்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலான வாழை பயிர்கள் முற்றிலும் அழிந்து நாசமாகி உள்ளதால் அந்த சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தங்களின் வாழ்வாதாரம் இந்த ஆண்டு மேலும் பாதிக்கப்படும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Also see:
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி