2030-க்குள் 100% சதவீதம் மின் வாகனங்கள்! மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை

2030-க்குள் 100% சதவீதம் மின் வாகனங்கள்! மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை
ஹர்சவர்த்தன்
  • News18
  • Last Updated: December 29, 2019, 5:22 PM IST
  • Share this:
நாடு முழுவதும் 2030ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் மின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். வளாகத்தில், அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு தீர்வுக்கான புதுமை தொழில்நுட்ப மைய கட்டிடத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அடிக்கல் நாட்டினார். ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்ததாக லித்தியம் அயன் பேட்டரி மூலமாக செயல்படும் இருசக்கர வாகனத்தை (Electric scooter) அறிமுகம் செய்து அதனை ஓட்டினார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன். மேலும் சி.எஸ்.ஐ.ஆர் வளாகத்தில் செர்ரி (Spanish cherry) மரக்கன்று ஒன்றையும் ஹர்ஷவர்த்தன் நட்டுவைத்தார்.

அதன்பிறகு பேசிய அவர், ‘இந்த நாள் சி.எஸ்.ஐ.ஆர்க்கு மட்டும் முக்கியமான நாள் அல்ல. நாட்டின் மிக முக்கிய எதிர்கால தேவைகளுள் ஒன்றான அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பதற்கான தொழில் நுட்ப மையம் துவக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் லித்தியம் அயன் பேட்டரிகள் ஆய்வு போன்றவற்றில் மிக சிறப்பாக சி.எஸ்.ஐ.ஆர் செயல்பட்டு வருகிறது.


புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த செய்தி இன்று நாடு முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே ஒரு பெரிய சவலாக தான் உள்ளது. பசுமை வீடு விளைவுகள் குறித்து பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவின் பிரச்சினைக்காக மட்டும் பேசவில்லை உலகளாவிய பிரச்சினையாக தான் பேசினார்.

புதிய இந்தியாவை உருவாக்கும் திட்டம் மூலம் பசுமை ஆற்றல் மூலங்களுக்கு( clean energy ) முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.  அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டிற்குள் 175 ஜிகா வாட் திறன் கொண்ட பசுமை ஆற்றல் மூலங்களை இந்தியாவில் உற்பத்தி செய்திட பிரதமர் மோடி தலைமையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்னதாக 2018ஆம் ஆண்டிலேயே அந்த இலக்கை நாம் அடைந்து விட்டோம்.

எனவே 2022ம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலங்கள்(clean energy)வழியாக 400 ஜிகா வாட்  உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2030ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் மின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் அறிவியல் வளர்ச்சியில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்தார்.Also see:


 
First published: December 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading