ஆரணியில் 100 சதவீத வாக்கு பதிவுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆரணியில் 100 சதவீத வாக்கு பதிவுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரிசி மூட்டைகள் மற்றும் நெல் ஆகியவற்றைக் கொண்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரைபடம் வரையப்பட்டது.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரையில் 18 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப் பட்டிருப்பதாகவும், வாக்களிக்க பணம் வாங்குவதும் கொடுப்பதும் இந்திய தேர்தல் ஆணையம் படி தவறு என்பதால் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யபடும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் கிராமத்தில், 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் அரிசி ஆலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பங்கேற்றார். அங்கு, நாட்டுபுற கலைஞர்கள் வேடமணிந்து 100சதவீதம் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள். பின்னர் அரிசி மூட்டைகள் மற்றும் நெல் ஆகியவற்றைக் கொண்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலைஞர்கள் வரைபடம் வரைந்தனர்.

    பின்னர், ஆரணி அடுத்த சந்தவாசல் அருகே உள்ள வெள்ளுர் கிராமத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் வாக்கு பதிவு பூத் மற்றும் இ.வி.எம் இயந்திரம் மாதிரி வாக்கு பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “மாவட்ட அளவில் இதுவரையில் கணக்கில் வராத 18 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. கருவூலம் அலுவலகத்தில் முறையான ஆவணத்தை சமர்பித்து உரியவர்கள் பணத்தை பெற்று கொள்ளலாம்.

    வாக்களிக்க பணம் வாங்குவதும் கொடுப்பதும் இந்திய தேர்தல் ஆணையம் விதிப்படி குற்றம். இந்த குற்ற செயலில் ஈடுபட்டால், காவல் துறையினர் மூலம் வழக்கு பதிவு செய்வோம். மாவட்ட அளவில் 24 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.

    Must Read : தீண்டாமை வேண்டாமென உணர்த்திய ஆதிசிவன்!

     

    அதுமட்டுமின்றி புதிய வாக்களர்கள் தேர்தலில் வாக்களிக்கவும் பொதுமக்கள் பணம் பெற்று கொள்ளாமல் வாக்களிக்கவும் விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.”
    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
    Published by:Suresh V
    First published: