முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் காலி மனைக்கான வரி 100% உயர்வு - அரசு அறிவிப்பு

தமிழகத்தில் காலி மனைக்கான வரி 100% உயர்வு - அரசு அறிவிப்பு

காலி மனைக்கான வரி  உயர்வு

காலி மனைக்கான வரி உயர்வு

Empty land tax increased : தமிழ் நாட்டில் சொத்து வரியைத் தொடர்ந்து, காலி மனைக்கான வரியை 100 சதவீதம் அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காலிமனை மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிந்து, வழக்கமான வரிவிதிப்புகளை மேற்கொள்ள 3 மாத காலம் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதுவரை புதிதாக பெறப்படும் காலிமனை வரிவிதிக்கக் கோரும், விண்ணப்பங்களை உரிய விதிகளைப் பின்பற்றி பரிசீலனை செய்து ரசீதுகளை வைப்பு ரசீதுகளாக தற்காலிகமாக வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீராய்வுப் பணிகள் முடிவடைந்தவுடன், புதிய வரி விகிதங்களின்படி வரிவிதிப்பு செய்தல் வேண்டும் என்றும், ஏற்கனவே பெறப்பட்ட வைப்புத் தொகையை ஈடுசெய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Must Read : அரிசி, கோதுமை போன்று கேழ்வரகு கூட இனி ரேஷன் கடையிலேயே வாங்கலாம்.. அரசு சூப்பர் அறிவிப்பு

அத்துடன், கட்டட விண்ணப்ப நடைமுறை தடையின்றி செயல்பட மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு கணினி ஆராய்வாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Property tax, Taxi, TN Govt