100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒருநாள் ஊதியமாக இனி 281 ரூபாய் வழங்கப்படும் என ஊராட்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2021-2022-ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஒருநாள் கூலி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண், பெண் இருபாலாருக்கு ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கான ஊதிய தொகையில் மத்திய அரசானது 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் பகிா்ந்து கொள்கின்றன. அதன்படி, 674 கோடியே 84லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு ஏற்கனவே விடுத்திருந்தது. 25 சதவீத தொகையான 224 கோடியே 94 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை மாநில அரசு விடுத்திருக்கிறது.
Must Read : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு
நிா்வாகச் செலவுகளுக்காக 49 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக 949 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 8 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.