மொட்டையடித்து, வாயில் மிளகாய் பொடி திணித்து, தீயால் சுட்டு 10 வயது சிறுவன் கொடூரக் கொலை - கிருஷ்ணகிரி அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப் படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மலையடிவாரத்தில் சித்திரவதை செய்து கொலைசெய்யப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் கைபற்றியுள்ளனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லை செல்லும் வழியில் மல்லேஸ்வரன் என்ற மலை பகுதி உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் மலைஅடிவாரத்தில் விறகு சேகரிக்க செல்வது வழக்கம்.

  திங்கள்கிழமை காலை மலைப்பகுதிக்கு சென்ற போது 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர். சிறுவன் சடலம்கிடப்பது தொடர்பாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

  சிறுவனின் சடலத்தை மீட்டபோலீசார் ஆய்வு செய்ததில் சிறுவன் உடலில் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களும், மொட்டையடிக்கப்பட்டும், வாயில் மிளகாய் பொடி திணிக்கப்பட்டும், மார்பு, கை, கால் போன்ற உடல்பகுதி முழுவதும் தீயால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது

  கொலைசெய்யப்பட்ட சிறுவனின் அடையாளம் எதுவும் அந்தப்பகுதியில் கிடைக்கவில்லை. வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் மோப்பநாய் வரவழைத்தும், தடயவியல் துறை அதிகாரிகளை வரவழைத்தும் சோதனை மேற்கொண்டனர்.

  அத்துடன் சுற்றுவட்டாரப்பகுதியில் சிறுவர்கள் காணவில்லை என்று காவல்நிலையங்களில் எதும் புகார் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு சடலமாக மிட்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: