• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த தாத்தாவிற்கு 10 ஆண்டுகள் சிறை!

பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த தாத்தாவிற்கு 10 ஆண்டுகள் சிறை!

பாலியல் தொல்லை அளித்த சங்கரநாராயணன்

பாலியல் தொல்லை அளித்த சங்கரநாராயணன்

பாலியல் தொல்லை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.15,000 அபராதமும், கொலைமிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த தாத்தாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை மருத்துவமனைக்கே நேரில் சென்று கடலூர் மாவட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (63). இவர் அதேப்பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு வீடு கட்டிக் கொண்டிருந்தார். 23.01.2017 அன்று புது வீட்டிற்குச் சென்ற இவரது பேத்தி முறைக்கொண்ட 12 வயது சிறுமிக்கு சங்கரநாராயணன் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வீட்டில் தெரிவித்தால் தாய்-தந்தையை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர், 3 மாதம் கழித்து மிதிவண்டியில் அவ்வழியாகச் சென்ற சிறுமி கீழே விழுந்தார். அப்போதும் அவரை தூக்கி விடுவது போன்று செய்து பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் திட்டக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

நேற்று, விசாரணையில் சங்கரநாராயணனிடம் உங்களது குற்றம் நிருபிக்கப்பட்டதால் உங்களை குற்றவாளியென அறிவிக்கிறோம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சங்கரநாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழவும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல்நிலையை காரணமாக தெரிவித்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

நீதிபதி டி.லிங்கேஸ்வரன்


இதனையடுத்து நீதிபதி டி.லிங்கேஸ்வரன் வெள்ளிக்கிழமை மாலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அது தொடர்பாக அவரிடம் கையெழுத்துப் பெற்றுத் திரும்பினார்.

இதுகுறித்து அரசு வழக்குரைஞர் க.செல்வபிரியா கூறுகையில், பாலியல் தொல்லை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15,000 அபராதமும், கொலைமிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவமனைக்கேச் சென்று பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்றார்.

அரசு மருத்துவமனைக்கேச் சென்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: