தமிழகத்தில் ஒரேநாளில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் : 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

மா.சுப்ரமணியன்

நிபா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னை சைதாப்பேட்டை மடுவாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வருவாய்த் துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரேநாளில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி, 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிபா வைரசினால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்தது. ஏற்கனவே ஜிகா வைரஸ் கேரளாவில் தாக்கிய போது கோவை எல்லையோரமாக உள்ள வாளையார் சென்று ஆய்வு செய்து முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் தாக்கம் என்கிற செய்தி கிடைத்தும் கேரள, தமிழக எல்லையோரம் உள்ள 9 மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு கூடுதலாக சோதனை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் கட்டாயம் காட்ட வேண்டும். அதைப் போன்று நிபா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே பாதுகாப்பான நிலையில் தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் எந்த தொற்றையும் எல்லைகளில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது 33 லட்சம் வரை தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி ஒரேநாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12ஆம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    மேலும் குழந்தை மீதான பாதிப்பு 2ஆம் அலை தொடக்கத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருப்பினும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளிகளில் உடனேயே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    Must Read : போலி கொரோனா தடுப்பூசிகளை எப்படி கண்டுபிடிப்பது? : மத்திய அரசு விளக்கம்

    மேலும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கேனுடன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது. இதன் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், 13 நிமிடத்தில் பரிசோதனை முடிவை அறியலாம். தமிழகத்தில் இதுவரை 3.50 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப் பட்டுள்ளது என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: