இந்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள் தேர்வு

news18
Updated: September 14, 2019, 7:57 AM IST
இந்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள் தேர்வு
news18
Updated: September 14, 2019, 7:57 AM IST
 10-ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வியாண்டு முதல் ஒரே தாள் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் பல மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் நடத்தப்படும் 2 தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.  பள்ளி மாணவர்களின் சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கும் 2 தனித்தனித் தேர்வுகள் இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் கல்வி இயக்குநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது
First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...