தமிழகத்தில் இயக்கப்பட உள்ள 10 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோப்பு படம்

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரம் ஒருமுறை ஏப்ரல் 16ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில், தாம்பரம் - நாகர்கோவில் இடையே அடுத்த மாதம் 26ம் தேதி முதல் அந்த்யோதயா ரயில் மீண்டும் தினந்தோறும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 10ம் தேதி முதல் தினசரி முன்பதிவில்லா விரைவு ரயிலும் ஏப்ரல் 11ம் தேதி முதல் புதுச்சேரி- கன்னியாகுமரி இடையே வாரம் ஒருமுறை சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரம் ஒருமுறை ஏப்ரல் 16ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரம் இருமுறை ஏப்ரல் 17ம் தேதி முதல் அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...கொரோனா சிகிச்சை பிரிவுக்கு நவீன கருவிகள் வழங்கிய அறக்கட்டளை...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: