ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

10% இட ஒதுக்கீடு விவகாரம்... அனைத்துக்கட்சி கூட்டத்தை நிராகரிக்கும் அதிமுக?

10% இட ஒதுக்கீடு விவகாரம்... அனைத்துக்கட்சி கூட்டத்தை நிராகரிக்கும் அதிமுக?

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து நடைப்பெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாளை முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற உள்ள நிலையில், அதிமுக பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 10:30மணியளவில் நடைப்பெற உள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாக வும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Also see...போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில், 10% சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை நடைப்பெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, CM MK Stalin, DMK, EPS