Home /News /tamil-nadu /

அரசு பேருந்து முன்பதிவு: கட்டணத்தில் அதிரடி சலுகை அமலுக்கு வந்தது

அரசு பேருந்து முன்பதிவு: கட்டணத்தில் அதிரடி சலுகை அமலுக்கு வந்தது

மாதிரி படம்

மாதிரி படம்

மாற்றுத்திறனாளிகள் , மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சலுகை கட்டணத்தில் பயணிப்போருக்கும், பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்கும் இந்த 10 சதவீத கட்டணக் குறைவு சலுகை பொருந்தாது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசு பேருந்தில் தொலைதூர நகரங்களுக்கு சென்று வர (Up and down) ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டண சலுகை அமலுக்கு வந்துள்ளது..

    இந்த அறிவிப்பு கடந்த சட்டபேரவை கூட்டத்தொடரிலேயே மானிய கோரிக்கை விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

    ஆன்லைன் பதிவு மூலம் குறிப்பிட்ட நகரத்திலிருந்து புறப்பட்டு அதே இடத்திற்கு திரும்பும் பயணிகளுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும்.. ( குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கு மட்டும் பதிவு செய்தால் கட்டண சலுகை கிடையாது , உதாரணத்திற்கு சென்னை - நெல்லைக்கு முன்பதிவு செய்தால் 10 சதவீத சலுகை கிடைக்காது , சென்னை - நெல்லை , நெல்லை - சென்னை என up and down க்கு சேர்த்து பதிவு செய்தால் மட்டுமே 10 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும் )

    Also Read :  கேப்டன்சியை நான் உதறியபோது தோனி மட்டும்தான் எனக்கு மெசேஜ் செய்தார் - விராட் கோலி

    மாற்றுத்திறனாளிகள் , மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சலுகை கட்டணத்தில் பயணிப்போருக்கும், பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்கும் இந்த 10 சதவீத கட்டணக் குறைவு சலுகை பொருந்தாது . வழக்கமான நாட்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவிற்கு மட்டுமே பொருந்தும்.

    அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க, https://www.tnstc.in என்ற இணையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Govt Bus, Minister Sivasankar, Passengers, TNSTC

    அடுத்த செய்தி