தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்கிற அறிவிப்பை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

  • Share this:
    சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, 25 புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்.

    தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் புதிய இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்றார்.

    Also read:  தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    மேலும் அடுத்த கல்வியாண்டில் இருந்து சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும் எனவும் படிப்படியாக இதர பட்டயப் படிப்புகளும் தமிழ் வழியில் தொடங்கப்படும்.

    பட்டய படிப்பு பயின்ற மாணவர்கள் தமிழகத்தில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் பி.காம் படிப்பில் சேர்ந்து பயில வழிவகை செய்யப்படும் உள்ளிட்ட 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: