Home /News /tamil-nadu /

பலாப்பழ ஐஸ்கிரீம் முதல் Cold Coffee வரை.. ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்

பலாப்பழ ஐஸ்கிரீம் முதல் Cold Coffee வரை.. ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்

ஆவினில் 10 பால் உபபொருட்கள் விரைவில் அறிமுகமாகிறது

ஆவினில் 10 பால் உபபொருட்கள் விரைவில் அறிமுகமாகிறது

ஆவினில் 10 பால் உபபொருட்களைப் புதிதாக அறிமுகமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆவினில் விரைவில் புதிதாக 10 பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். இந்த புதிய அறிமுகம் வரும் 20 ஆம் தேதி முதல் ஆவின் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஆவின் பால் மற்றும் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது நுகர்வோரின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

    இது வரை 150 உபபொருட்கள் தமிழ்நாட்டில் பல்வேறு நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 10 புதிய பால் உபபொருட்கள் ஆவின் அறிமுகப்படுத்த உள்ளது. அவற்றில் நுகர்வோரால் விரும்பத்தக்க வகையில் கோல்ட் காபி, பலாப்பழம் ஐஸ்கிரீம், யோகர்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.

    Also Read: சென்னை வடபழனியில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து - போலீசார் விசாரணை

    இந்த 10 புதிய பால் உபபொருட்களும் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையிலும் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நலன் கருதி இந்த புதிய அறிமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தயார் நிலையில் உள்ள இந்த புதிய பால் உபபொருட்கள் விற்பனையைப் பால்வளத் துறை அமைச்சர் நாசர், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் வரும் 20ம் தேதி அறிமுகப்படுத்துகிறார்.

    ஆவினில் அறிமுகமாகும் 10 பால் உபபொருட்களை
    பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream)
    வெள்ளை சாக்லேட் (White Chocolate )
    குளிர்ந்த காஃபி (Cold Coffee)
    வெண்ணெய் கட்டி (Butter Chiplets)
    பாஸந்தி (Basundi)
    ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix)
    பாலாடைக்கட்டி (Processed Cheese )
    அடுமனை யோகர்ட் (Baked Yoghurt)
    ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit)
    ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku )
    Published by:Janvi
    First published:

    Tags: Aavin, Dairy Food

    அடுத்த செய்தி