ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

சென்னை அடுத்த எண்ணூரில் ஆந்திர வனப்பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 • Share this:
  கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் அதி நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை சாவாடி உள்ளது. அங்கு நேற்று நடந்த சோதனையின் போது ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் தர்பூசணி பழங்களுக்கு அடியில் வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 1டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

  திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது. கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த வாகனத்தை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தப்பியோடினர்.

  மேலும் படிக்க... அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

  பின்னர் அந்த வாகனத்தை சோதனையிட்டதில் தர்ப்பூசணி பழங்களுக்கு அடியில் மறைத்து செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 1டன் செம்மரக்கட்டைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: