• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கார்டுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்து இருக்கிறார்களா..?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கார்டுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்து இருக்கிறார்களா..?

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 10,54,327 நபர்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு (Smart ration Card) கோரி விண்ணப்பித்துள்ளனர்.

  • Share this:
    மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வரை புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு (Ration Card) பெறுவதற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் 67,051 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று கடந்த மே மாதம் 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுக தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று, ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 10,54,327 நபர்கள் புதிய ஸ்மார் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 7,28,703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 2,61,844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



    மேலும், 6,65,102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 63,601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 63,780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும்,உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் 67,051 நபர்கள் விண்ணப்பித்ததில், 36,815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 12,754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    மேலும், 27,829 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு, 8986 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் வட சென்னையில், 55,962 நபர்கள் விண்ணப்பித்ததில், 28,624 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 10,741 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில், 24,234 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 4,390 நபர்களுக்கு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : 5 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் உயிரிழப்பு: கவுரவ விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா? - ராமதாஸ் கேள்வி

    அதேபோல் கடந்த 5 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65,003 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 59,495 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர். அரசின் சலுகைகளைப் பெற மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால் பத்து லட்சத்திற்கு அதிகமாகன விண்ணப்பங்கள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: