Home /News /tamil-nadu /

மகாபலிபுரத்தில் மீட்கப்பட்ட பத்து தலை ராவணன் சிலைக்கு பின் இருக்கும் ஆச்சரியம்

மகாபலிபுரத்தில் மீட்கப்பட்ட பத்து தலை ராவணன் சிலைக்கு பின் இருக்கும் ஆச்சரியம்

10 தலை ராவணன்

10 தலை ராவணன்

சென்னை மகாபலிபுரம் அருகே 40 கோடி ரூபாய் மதிப்பிலான 12 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் ஒரே ஒரு சிலை மட்டும், அங்கிருந்த அத்தனை பேரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மகாபலிபுரம் அருகே "ஐடியல் பீச் ரெசார்ட்" எனும் சொகுசு விடுதியில் சோதனை நடத்திய சிலை கடத்தல் பிரிவு போலீசார், அங்கிருந்த ரகசிய அறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 12 உலோக சிலைகளை மீட்டனர். 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 நடராஜர் சிலைகள், மிகவும் தொன்மை வாய்ந்த பார்வதி சிலை, நர்த்தன விநாயகர் சிலை, 2 சிவன் சிலை, உள்ளிட்ட இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் என கூறப்படுகிறது

    இத்தனை சிலைகளில் அத்தனைபேரின் கவனத்தையும் ஈர்த்தது பத்து தலை ராவணன் சிலைதான். இதுவரை பல்வேறு வடிவிலான பழங்கால சிலைகளை மீட்டெடுத்திருக்கும் அதிகாரிகள், பத்து தலை ராவணன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்கின்றனர். ராவணன் சிலை தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல, இதன் வடிவமைப்பும் அதி சிறப்புமிக்கது என்கிறார்கள் தொல்லியல் துறை நிபுணர்கள்.அப்படி என்ன அந்த சிலைக்கு சிறப்பு எனத் தோன்றலாம்.

    ராவணனின் பத்து தலைகள் கொண்ட உருவம் செதுக்கப்பட்டிருக்க, அதற்கு பின்னால், சீதை துயில் கொண்டிருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராவணனுக்கென்று கோயில் இல்லையென்றும், மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில் ராவணன் பெயரில் ஊர் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ராவணன் சீலையின் பின்னந்தலையில் சீதை


    பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உயிரோட்டத்துடன் செய்யப்பட்ட உலோக வடிவிலான இந்த சிலை, வட இந்திய பகுதியிலிருந்து கடத்தப்பட்டதா இல்லை, அல்லது இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டதா என்பது குறித்த ஆராய்ச்சியை தொல்லியல் நிபுணர்கள் கையில் எடுத்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி