கரூரில் கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது!

கரூரில் கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது!
சேவல் சண்டை
  • Share this:
கரூர் மாவட்டம் பூலாம்வலசில், விதிகளை மீறி கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் சேவல்கட்டு போட்டி, நூற்றாண்டு பழமை வாய்ந்தது. 2014-ம் ஆண்டு பந்தயத்தின்போது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பட்டு, 2 பேர் உயிரிழந்ததால் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேவலின் காலில் கத்தி கட்டக்கூடாது, மது, ஊக்கமருந்து கொடுக்கக்கூடாது, பயிற்சியாளர் மது அருந்தி இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகளைகளுடன் அனுமதி தர, கடந்த ஆண்டு முதல் சேவல்கட்டு மீண்டும் தொடங்கியது.

இந்த ஆண்டு 4 நாட்கள் சேவல்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, போட்டி நேற்று தொடங்கியது. போட்டிக்காக பூலாம்வலசு கிராமத்தில் உள்ள குளத்தில் விரிவான ஏற்பாடுகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளன. ஆனால், அதிகாரபூர்வ போட்டி நடக்கும் பகுதிக்கு அருகிலேயே எந்த நிபந்தனைகளையும் பின்பற்றாமல் சேவலின் காலில் கத்தி கட்டி ஒரு சிலர் போட்டி நடத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


இவ்வாறு போட்டி நடத்தப்பட்டதில், சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த அரவக்குறிச்சி போலீசார், அனுமதியின்றியும், விதிகளை மீறியும் போட்டி நடத்திய 6 பேரை கைது செய்தனர். இதேபோன்று வெற்றி நகர் கார்டன் அருகே, போட்டி நடத்திய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 8 சேவல்கள், கத்தி, பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

Also see:

 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading