வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

சட்டமன்றம்

ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

  • Share this:
    வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வரும் காலங்களில் தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

    ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    Also read: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ‘ஜெ’ என்பதா? நாளிதழுக்கு நீதிமன்றம் அதிருப்தி!

    இந்நிலையில், இன்று வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.

    அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவையில் உறுதி அளித்திருந்தார்.

    Also read: ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை.. திறமைக்கான விளையாட்டு - தடையை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வாதம்

    அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26.2.21 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

    இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published: