ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

1 டிரில்லியன் அமெரிக்க டாலர்..1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - இலக்கு நிர்ணயித்த மு.க.ஸ்டாலின்..!

1 டிரில்லியன் அமெரிக்க டாலர்..1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - இலக்கு நிர்ணயித்த மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மாநாடு 4.0

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மாநாடு 4.0

Industry 4.0 : டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு“ எனும் தொழில் வளர்ச்சி – 4.0 மாநாடு இன்று நடைபெற்றது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற தொழில் வளர்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மையங்களைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, 2022-ஐ வெளியிட்டு உரையாற்றினார். அதில் 030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்படுவதாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தத் தர இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், தொழில்துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவிலான கவனத்தை மட்டுமல்ல - உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்று கூறினார்.

    இலக்கை அடைய ஒரு பகுதியாக மேம்பட்ட உற்பத்திக்கான இரு திறன்மிகு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியைவிட மிக அதிகமாக 51.4 விழுக்காடாக உள்ளது. அதனால் திறன்மிக்க பணியாளர்களை நமது மாநிலம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

    நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம் என்று பேசிய முதல்வர், அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன என்று பெருமிதம் கொண்டார்.

    தொழில் வளர்ச்சி மாநாடு (Industry 4.0):

    நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி (Industry 4.0) தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களைப் பயன்படுத்திக் கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சீமென்ஸ் மற்றும் GE ஏவியேஷன் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, இவ்வாறான மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்களை டிட்கோ நிறுவனம் இங்கு அமைத்துள்ளது.

    இந்தத் திறன்மிகு மையங்களில் நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்குத் தேவையான அம்சங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. இவற்றை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில் துறையினரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று உரையில் தெரிவித்துள்ளார்.

    திறன்மிகு மையங்கள் :

    முதலமைச்சர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டவை, டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திறன்மிகு மையம், “நான் முதல்வன்” திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்படும். டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில், 3D அச்சிடுதல் தொழில்நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) TAMCOE திறன்மிகு மையத்தினை உருவாக்கியுள்ளது.

    இந்த மையங்களிலிருந்து மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் மூலமாகவும், நமது மாநிலத்திற்கு அதிக காப்புரிமைகள் கிடைக்கும். எனவே, அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளுடன், தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்திடும் சக்தியாகவும் இந்த திறன்மிகு மையங்கள் விளங்கிடும்.

    தொழில் வளர்ச்சி - 4.0 தொடர்பான நவீனத் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத்திறன்மிகு மையங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Also Read : ”இட ஒதுக்கீடுக்கு ஆபத்து...உடனே இதை செய்யுங்க ...“ - தமிழக அரசை அலெர்ட் செய்த அன்புமணி!

    வான்வெளி மற்றும் பாதுகாப்பு :

    வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு எப்போதுமே, முன்னணி மாநிலமாகத்தான் இருந்து வருகிறது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

    காலாட்படையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதல் காலாட்படைப் பிரிவு, மெட்ராஸ் ரெஜிமெண்ட்தான். அதுவரை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த விமானங்கள், முதல் முறையாக, இந்தியாவில் 1910-ஆம் ஆண்டு சென்னையில்தான் தயாரிக்கப்பட்டது. இன்றும் கூட, HAL நிறுவனத்தின் இலகுவாகப் போர் விமானங்களின் பெரும்பான்மையான உதிரிப்பாகங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரிப்பதற்கும், தன்னிறைவு பெறுவதற்குமான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. மாநில வளர்ச்சிக்கும், அதன் கூடவே வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சிக்கும் ஏதுவாக, இத்துறையை வளர்ந்து வரும் துறையாக (Sunrise Sector) அறிவித்து, முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

    1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு:

    10 ஆண்டு காலகட்டத்திற்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்ற இலக்கை நாங்கள் இதன் மூலம் நிர்ணயித்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

    திறன் மேம்பாடு பயிற்சி மையங்கள் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட இயலும். ஓராண்டிற்குள் கிட்டத்தட்ட 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞர்கள் ஆளில்லா விமான பைலட்டுகளாக தகுதி பெற்று உலகை வலம் வர முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

    தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கினை அடைவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம் என்று கூறி உரையை முடித்துள்ளார்.

    Published by:Janvi
    First published:

    Tags: CM MK Stalin, Tamil Nadu government