• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பள்ளி செல்லாமல் இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு

பள்ளி செல்லாமல் இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
ஆண்டுதோறும் பள்ளி செல்லும் மாணவர்கள்  பல்வேறு காரணங்களால் பள்ளி செல்லாமல் இடைநின்று விடுகின்றனர் கொரொனோ பெருந்தொற்று காலத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இடைநிற்றல் அதிகரித நிலையில், தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை பள்ளி செல்லாமல் இடைநின்ற 2 லட்சம் மாணவர்களுள், 1.28 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடைநிற்றலை  தடுத்திடும் வகையில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அதற்குரிய பணிகளை கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல், மாதக்கணக்கில் பள்ளிக்கு வராத மாணவர்கள் மற்றும் தொடர்சியாக 15முதல் 30நாட்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு வகைப்படுத்தப்பட்டு பள்ளிக்கு வராமல் இடைநின்ற 2 லட்சம்  மாணவர்களின் முழு விவரங்கள்  EMIS எனப்படும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் பக்கத்தில் ஆசிரியர்கள் பதிவிடும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் உதவியோடு தனியாக  சேகரிக்கப்பட்டது.

இந்த பணியில் 40 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வகையில், சேகரிக்கப்பட்ட இடைநின்ற மாணவர்களின் விவரங்களுடன் மாணவர்களின்  இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று மாணவ, மாணவியரின் நேரில் சந்தித்து பள்ளிக்கு வராமல் இடைநின்ற காரணங்கள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களுடன் கலந்து பேசி மீண்டும் இடைநின்ற  1 லட்சத்து 28ஆயிரத்து 581 மாணவ, மாணவியர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கொரொனோவிற்கு முந்தைய காலங்களில் அதிகப்பட்சம் 28ஆயிரமாக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் கொரொனோ காரணமாக 1 லட்சத்து 28ஆயிரத்தை  கடந்துள்ளது.

இடைநின்ற மாணவ மாணவியர் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட விவரம்:

மாணவர்கள்  74,725, மாணவியர். 53,855 திருநங்கை 1
மொத்தம் 1,28,581.  பள்ளிக்கல்வித்துறை எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக  ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 581 மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Must Read : சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் - புகழேந்தி

2 லட்சம் மாணவர்கள் இடை நின்றுள்ளதாக கணக்கெடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மாணவர்களை கண்டறிந்து  பள்ளிகளில் சேர்க்கும்  பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: