• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை விமான நிலையத்தில் ரூ.1.2 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.2 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

போதைப்பொருட்களை பட்டுப்புடவை பார்சல்களில் வைத்து, சரக்கு விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியது தெரியவந்தது.

  • Share this:
    சென்னை விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு பட்டுப்புடவைகள் பார்சல்களில் மறைத்து கடத்தப்பட இருந்த ரூ.1.2 கோடி மதிப்புடைய 12 கிலோ சூடோ நெப்ரின் போதைப் பொருளை, மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் சென்னை மற்றும் தனிப்படையினரின் உதவியுடன் ஆஸ்திரேலியா விமான நிலையத்திலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லும் சரக்கு விமானத்தில், சரக்கு பார்சல்களில் மறைத்து பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்திற்கு வந்து ஆஸ்திரேலியா செல்லவிருந்த சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த பார்சல்களை சோதனையிட்டனா்.

    அப்போது பட்டுப்புடவைகள் அடங்கிய பார்சல்களில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ சூடோ நெப்ரின் போதைப் பொருளை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.80 லட்சம்.இதையடுத்து மத்திய போதை தடுப்பு தனிப்படையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அந்த பார்சலை, சரக்கு விமானத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப பதிவு செய்திருந்த ஏஜென்சியிடம் விசாரணை நடத்தினா்.

    அப்போது அந்த பட்டுப்புடவைகள், காரைக்காலில் உள்ள ஒரு கொரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய போதைப்பொருள் கடத்தல் தனிப்படையினா், காரைக்கால் சென்று, அந்த கொரியா் நிறுவனத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், பட்டுப்புடவை பார்சல்களை அனுப்பிய நபா் சென்னையை சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் சென்னை வந்து, சென்னையில் உள்ள அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அந்த நபர் உண்மையை ஒப்புக்கொண்டார். அத்துடன், மேலும் 4 சூடா நெப்ரின் போதைப்பொருள் இதேபோல பட்டுப்புடவை பார்சல்களில் வைத்து, இதற்கு முந்தைய சரக்கு விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

    இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படையினா் துரிதமாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். தூதரக அதிகாரிகள் உதவியுடன் விமானநிலையத்திலேயே 4 சூடோ நெப்ரின் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அந்த போதைப்பொருள் தற்போது மீண்டும் சென்னைக்கு மற்றொரு சரக்கு விமானத்தில் அனுப்பப்பட்டது.

    Must Read : மூங்கில் காட்டுக்குள் பதுங்கியிருக்கும் ஆட்கொல்லி புலி: புது வியூகம் வகுத்துள்ள வனத்துறை

    இந்நிலையில், கைதான சென்னை கடத்தல் ஆசாமியிடம் மத்திய போதை தடுப்பு தனிப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவா் ஆஸ்திரேலியாவிற்கு கடத்திய மொத்தம் 12 கிலோ சூடோ நெப்ரின் போதைப்பொருளின் சா்வதேச மதிப்பு ரூ.1.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல் நபர்கள் பற்றியும் விசாரணை நடைபெற்ற வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: