கலைஞரின் பிறந்த நாளன்று பிறந்த 13 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்..
கலைஞரின் பிறந்த நாளன்று பிறந்த 13 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்..
13 குழந்தைகளுக்கு தலா 1கிராம் தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்..
1 gram gold ring for thirteen babies because of kalaingar birthday கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று பிறந்த 13 குழந்தைகளுக்கு தலா 1கிராம் தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்..
தேனியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று அரசு மருத்துவமனைகளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் நேற்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகள், போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகள் என மொத்தம் 13 குழந்தைகளுக்கு இன்று தலா ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் ஹார்லிக்ஸ், பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று தாய்மார்களிடம் பொருட்களை வழங்கினர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.