ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அயன் படபாணியில் கடத்தல்.. சென்னை விமானநிலையத்தில் சிக்கிய 1 கோடி மதிப்பிலான தங்கம்

அயன் படபாணியில் கடத்தல்.. சென்னை விமானநிலையத்தில் சிக்கிய 1 கோடி மதிப்பிலான தங்கம்

சென்னை விமானநிலையம்

சென்னை விமானநிலையம்

Chennai | சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 10.70 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் இருவர் கைது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து சென்னைக்கு பர்ஸ், ஷு ஆகியவற்றில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1, 24,48,000 மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கம் பறிமுதல் 7 பேர் கைது.

  சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர். அப்போது கேரளா மாநிலம் கன்னூரை சேர்ந்த நிசார் மண்டல(27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு நடுவே பர்ஸ் மற்றும் காலில் அணிந்து இருந்த ஷு ஆகியவற்றை பரிசோதித்து பார்த்த போது தங்கம் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 64,98,000  மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல் கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். உள்ளாடை, உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ. 69,50,000  மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1,24,48,000  மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கேரளா வாலிபர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

  அதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ கலந்தர் தமிமுல் அன்சாரி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ முகமது நாகூர் மொஹிதீன் ஆகிய இரு பயணிகள் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்து உள்ளனர். அப்போது சுங்கத்துறை அதிரிகாரிகள் இருவரையும் நிறுத்தி சோதனை செய்த போது  உடைமைகளில் பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளை கட்டுக்கட்டாக கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 10.70 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரிடமும் தங்க கடத்தல், வெளிநாட்டு பணம் கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: சுரேஷ்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai, Chennai Airport, Crime News, Gold, Smuggling, Tamil News