தமிழ்நாடு முழுவதும் 1,82,000 குடும்ப அட்டைதாரர்கள் மளிகை தொகுப்புகளை வாங்கவில்லை: கூட்டுறவு துறை அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 1,82,000 குடும்ப அட்டைதாரர்கள் மளிகை தொகுப்புகளை வாங்கவில்லை: கூட்டுறவு துறை அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 1,82,000 குடும்ப அட்டைதாரர்கள் மளிகை தொகுப்புகளை வாங்கவில்லை என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. 

  • Share this:
கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்படைந்தனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 5 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானதாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் ரொக்கம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் நியாயவிலைக் கடைகள் மூலமாக 14 வகையான மளிகை தொகுப்புகள் தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதியில் இருந்து, கடந்த ஜூலை 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

Also read: நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீஸ் - போனை எடுக்காத கறிக்கடைக்காரருக்கு அடி உதை

முன்னதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கி, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் நியாயவிலை கடைகளுக்கு வந்து குடும்ப அட்டைதாரர்கள் மளிகை தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்து, அதன் அடிப்படையில் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1,82,197 குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்ட மளிகை தொகுப்புகளை வாங்கவில்லை என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 510 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மளிகை தொகுப்புகளை வழங்க கூட்டுறவுத்துறை அறிவித்திருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் மளிகை தொகுப்புகளை பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையாளர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துணை ஆணையாளர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது... தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 597 குடும்ப அட்டைதாரர்கள் 14 வகையான மளிகை தொகுப்புகளை பெற்று செல்லப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இதற்கு தீர்வு காணும் முறையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதம் உள்ள மளிகை பொருட்களின் தொகுப்புகளை குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட குறிப்பாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குணமடைந்த மக்களின் குடும்பங்களுக்கும், அரசு மன நல காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தொழு நோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கும் இந்த மளிகை தொகுப்பு வழங்கப்படவேண்டும், மேலும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உணவு பொருள் வழங்கல் துறையின் துணை ஆணையாளர்கள், அவர்களின் விருப்புரிமை அடிப்படையில் பொதுநல அரசு சார்/ அரசு சாரா அமைப்புகளில் தங்கி பெற்றுவரும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளின் அடிப்படையிலான விகிதாச்சாரப்படி அவர்களது குடும்பங்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அவ்வாறு மேற்கண்ட குடும்பங்களுக்கு வழங்கியதற்கு ஒவ்வொரு பயனாளிகளிடம் இருந்து கையப்பம் பெற்று அறிக்கையாக தொகுத்து அனுப்புமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published: