புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச தொழிலாளர்களை பணியமர்த்தும் மாநிலங்கள் அதற்காக அனுமதி பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச தொழிலாளர்களை பணியமர்த்தும் மாநிலங்கள் அதற்காக அனுமதி பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில்,  இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் அதிகளவு புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களுக்கு உத்தரபிரதேசத்திலேயே வேலை வழங்க புலம் பெயர் தொழிலாளர் ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதற்காக மாநிலம் திரும்பிய தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பும், காப்பீடும் வழங்குவதாக உறுதியளிக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே  அனுமதி அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சில மாநிலங்களில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...
 
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading