Home /News /sports /

ஜோகோவிச்சை வீழ்த்தி 21 வயதேயான ஸ்வெரெவ் சாம்பியன்!

ஜோகோவிச்சை வீழ்த்தி 21 வயதேயான ஸ்வெரெவ் சாம்பியன்!

ஏ.டி.பி கோப்பையுடன் ஸ்வெரெவ் (Tennis TV/Twitter)

ஏ.டி.பி கோப்பையுடன் ஸ்வெரெவ் (Tennis TV/Twitter)

Zverev Shocks Djokovic to Win ATP Finals in London | குறைந்த வயதில் ஏ.டி.பி சாம்பியன்ஷிப்பில் பட்டத்தை வாகை சூடிய வீரர் என்ற சாதைனையும் ஸ்வெரெவ் நிகழ்த்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    ஏ.டி.பி ஃபைனல்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி, 21 வயதேயான அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டென்னிஸ் தரவரிசையில், முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி ஃபைனல்ஸ் சாம்பியன்ஷிப் தொடர், ஆண்டு இறுதியில் நடத்தப்படுவது வழக்கம். லண்டனில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசையில் நம்பன் ஒன் இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்-வுடன் பலப்பரீட்சை நடத்தினார். நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், தொடக்கம் முதலே அதீத நம்பிக்கையில் ஆடியதால், அடுத்தடுத்து தவறுகள் செய்தார். ஆனால், இளம் வீரரான ஸ்வெரெவ், மிகவும் நேர்த்தியாகவும், அதேவேளையில் ஆக்ரோஷமாகவும் விளையாடினார்.

    களத்தில் ஆக்ரோசமான ஸ்வெரெவ் (Twiiter/ATP)


    அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், புள்ளிகளை எடுக்க முடியாமல் ஜோகோவிச் திணறினார். இதை சாதமாக்கிக்கொண்ட ஸ்வெரெவ், 6-4, 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.



    இதன் மூலம், ஏ.டி.பி சாம்பியன்ஷிப்பில், முதல் முறையாக மகுடம் சூடி ஸ்வெரெவ் சாதனை படைத்தார். அத்துடன், 23 ஆண்டுக்குப் பின், இந்தப் பட்டத்தை உச்சி முகர்ந்த முதல் ஜெர்மனி வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

    பட்டம் வென்றதால் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஸ்வெரெவ் (Twitter/ATP)


    முன்னதாக, 1995-ல் போரிஸ் பெக்கர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும், 21 வயதாகும் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், குறைந்த வயதில், ஏ.டி.பி சாம்பியன்ஷிப்பில் பட்டத்தை வாகை சூடிய வீரர் என்ற சாதைனையும் நிகழ்த்தியுள்ளார்.

    Also See...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Alexander Zverev, Novak Djokovic

    அடுத்த செய்தி