தோனியுடன் இணைந்து காரை சுத்தம் செய்யும் ஷிவா! வீடியோ

தோனியுடன் இணைந்து காரை சுத்தம் செய்யும் ஷிவா! வீடியோ
  • Share this:
தான் வைத்திருக்கும் வின்டேஜ் நிசான் ஜோங்கா எஸ்யூவி காரை தோனி மற்றும் அவரது மகள் ஷிவா இணைந்து சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வின்டேஜ் நிசான் ஜோங்கா எஸ்யூவி காரை தோனி வைத்துள்ளார். நிசான் Jonga எஸ்யூவி கார் உற்பத்தி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நிறுத்தும் முன்னர் லிமிடெட் எடிஷனாக குறைந்த எண்ணிக்கையிலான கார்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்கப்பட்டன. இத்தகைய வின்டேஜ் ரக காரைத்தான் தற்போது தோனி பயன்படுத்தி வருகிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடிய 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டத்தின் போது தோனி மைதானத்திற்கு இந்த காரில் தான் சென்றார். மைதானத்திற்கு தோனி வந்த போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


இந்நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் வின்டேஜ் காரை சுத்தம் செய்யும் போது ஷிவாவும் அவருக்கு உதவி செய்கிறார். பள்ளி சீருடையில் ஷிவா செய்யும் உதவியை தான் தோனி பகிர்ந்துள்ளார்.

 
View this post on Instagram
 

A little help always goes a long way specially when u realise it’s a big vehicle


A post shared by M S Dhoni (@mahi7781) on


வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. ஜார்கண்ட் மைதானத்தில் அவர் பயிற்சியை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ஜனவரி மாதம் தொடங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Watch

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading