ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வில்வித்தை பயிற்சியின் போது சோகம்.. சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!

வில்வித்தை பயிற்சியின் போது சோகம்.. சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது வீராங்கணை மீது அம்பு பாய்ந்தது.

அசாமின் சபுயாவில் அந்த மாநிலத்திற்கான விளையாட்டு கமிஷன் உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சியில் 12 வயதுற்கான சிறுவர் மற்றும் சிறுமிகள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு தவறுதலாக அங்கிருந்து ஷிவாஞ்சினி கோகைகன் என்ற 12 வயது வீராங்கணையின் வலதுகை தோள்பட்டையில் பாய்ந்தது.

இதனால் வலியால் துடித்த அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. பின் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு எலும்பை துளைத்துள்ளது. தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.

First published: