முகப்பு /செய்தி /விளையாட்டு / சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்

சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்

 சானியா மிர்சா

சானியா மிர்சா

Sania mirza : சானியா மிர்சாவிற்கு அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயப் மாலிக் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், சானியா மிர்சாவின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாறு சோகத்துடன் நிறைவடைந்தது.

இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, பிரேசில் நாட்டின் லூயிசா ஸ்டெபானி - ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது.டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டில் 7க்கு 6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்த சானியா - ரோகன் ஜோடி, 2-வது செட்டை 6-க்கு 2 என இழந்ததால் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து.

பரிசளிப்பு விழாவில் பேசிய சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து விடைபெறுவதைக் கூறி கண் கலங்கினார். சானியா மிர்சா 6 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் கோப்பைகளை வென்று சாதித்துள்ளார்.விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அதிமுக்கியத்துவ நம்பிக்கை கீற்றாக திகழ்ந்தாய் என சானியாவிற்கு, அவரது கணவர் ஷோயப் மாலிக் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் தோல்வி அடைந்த சானியா, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றார்.இந்நிலையில் சானியா மிர்சாவிற்கு அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயப் மாலிக் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உனது துறையில் நீ சாதித்தவற்றை நினைத்து தான் பெருமை கொள்வதாக ஷோயப் மாலிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பலருக்கு உந்து சக்தியாக சானியா திகழ்வதாக ஷோயப் மாலிக் தெரிவித்தார்.ஷோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மனைவியை பாராட்டி கணவர் வாழ்த்து பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Sania Mirza, Shoaib malik, Tamil News, Tennis