ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை தகுதி!

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை தகுதி!
யாஷ்அஸ்வினி தேஸ்வால்
  • News18
  • Last Updated: September 1, 2019, 4:00 PM IST
  • Share this:
பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தேஸ்வால் தங்கப்பதக்கம் வென்று 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ரைஃபில் பிரிவில் இந்தியாவின் யாஷ் அஸ்வினி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெறும் 9 ஆவது இந்திய வீராங்கனையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடருக்கு இதுவரை அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகிய 9 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வாரத்தில் மட்டும், உலக பேட்மிண்டனில் மகுடம் சூடிய முதல் இந்தியர் பி.வி. சிந்து மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் மற்றும் யஷாஸ்வினி சிங் தேஸ்வால் ஆகிய மூன்று இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: September 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்