இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் ஷோ - WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல்

”WWE நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டும் இப்போட்டிகளை ஆண்டுக்கு 34 கோடி நேயர்கள் பார்த்து ரசிக்கின்றனர்”

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் ஷோ - WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல்
பிராக் லெஸ்னர்
  • News18
  • Last Updated: May 18, 2020, 7:51 AM IST
  • Share this:
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் மத்தியில் பிரசித்தி பெற்ற WWE மல்யுத்தப் போட்டிகளில் அதிக ஊதியம் பெறுபவர் யார் என்ற கேள்வி ரசிகர்களைத் துளைக்காமல் இருந்ததில்லை. 

WWE எனப்படும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் போட்டிகளுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக ரசிகர்கள் உள்ள நாடு இந்தியா. 2018ம் ஆண்டில் இந்தியாவில் கிரிக்கெட்டை விட அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டாக WWE திகழ்ந்தது என்றால் பாருங்கள். இந்தியாவில் மட்டும் இப்போட்டிகளை ஆண்டுக்கு 34 கோடி நேயர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

WWEஹிட்மேன் அண்டர்டேக்கர், தி ராக், ஜான் சினா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் மத்தியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிரேட் காளி, ஜிண்டர் மஹால் ஆகியோரும் இதில் முத்திரை பதித்துள்ளனர்.

பணம் கொழிக்கும் இந்த WWE விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் யார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம். அதற்கு விடையாக அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தற்போதைய யூனிவர்சல் சாம்பியனான பிராவ்ன் ஸ்ட்ரோமேன் 2019ம் ஆண்டில் 1.9 மில்லியன் டாலர்களை ஈட்டி 10ம் இடத்தில் உள்ளார். அடுத்ததாக முன்னாள் உலக சாம்பியன் டிரிபிள் எச்சின் மனைவியும், தற்போதைய தலைமை பிராண்ட் அதிகாரியுமான ஸ்டெபானி மெக்மோகன் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளார்.

WWE உரிமையாளர் வின்ஸ் மெக்மோகனின் மகனும் ஸ்டெபானியின் அண்ணனுமான ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர்களை ஈட்டி 8வது இடத்தில் உள்ளார்.ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அனுபவ வீரர் கோல்ட்பெர்க், 3 மில்லியன் டாலர்களுடன் ஏழாவது இடத்திலும், அதிரடி வீராங்கனை பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலருடன் 6-வது இடத்திலும், 3.3 மில்லியன் டாலர் வருவாயுடன் டிரிபிள் எச் 5ம் இடத்திலும் உள்ளனர்.

தந்திரக்கார சேத் ரோலின்ஸ் 4 மில்லியன் டாலர்களை குவித்து நான்காம் இடத்திலும், வைப்பர் எனப்படும் ரேண்டி ஆர்டன் 4.1 மில்லியன் டாலர்களுடன் 3ம் இடத்திலும், ரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் "போஸ்டர் பாய்" ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

"தி பீஸ்ட்" எனப்படும் 42 வயது முரட்டு வீரரான பிராக் லெஸ்னர்தான் வருவாயில் முதலிடத்தைப் பிடித்துள்ளார், அவர் ரோமன் ரெய்ன்ஸைவிட இருமடங்கு அதிகமாக அதாவது 10 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். இப்போட்டிகள் திட்டமிடப்பட்ட நாடகம் என கூறப்பட்டாலும், ரசிகர்களிடம் 40 ஆண்டுகளாக குறையாத வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

WWE நட்சத்திரங்கள் பெற்ற ஊதியம்:

10வது இடம்: பிராவ்ன் ஸ்ட்ரோமேன் - 1.9 மில்லியன் டாலர்

9வது இடம்: ஸ்டெபானி மெக்மோகன் - 2 மில்லியன் டாலர்

8வது இடம்: ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர்

7வது இடம்: கோல்ட்பெர்க் - 3 மில்லியன் டாலர்

6-வது இடம்: பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலர்

5-து இடம்: டிரிபிள் எச் - 3.3 மில்லியன் டாலர்

4-து இடம்: சேத் ரோலின்ஸ் - 4 மில்லியன் டாலர்கள்

3-வது இடம்: ரேண்டி ஆர்டன் - 4.1 மில்லியன் டாலர்

2வது இடத்தில் ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர்

முதலிடத்தில் பிராக் லெஸ்னர் 10 மில்லியன் டாலர்


First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading