Home /News /sports /

உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர் மெஸ்ஸி: இந்தியாவில் கோலி- ஆண்டு வருமானம் தெரியுமா?

உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர் மெஸ்ஸி: இந்தியாவில் கோலி- ஆண்டு வருமானம் தெரியுமா?

கோலி, மெஸ்ஸி

கோலி, மெஸ்ஸி

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முதல் இடம் பிடித்துள்ளார்.

    உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். 100 வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் எத்தனை கோடிகள் வருமானம் ஈட்டியுள்ளனர் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

    உலக அளவில் விளையாட்டுத்துறையில், கடந்த ஓராண்டில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

    இதில் கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    கடந்தாண்டு மே மாதம் முதல் இந்தாண்டு மே மாதம் வரை விளையாட்டு வீரர்களின் வருமானம் கணக்கிடப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதில் வீரர்களின் ஊதியம், பரிசுத்தொகை மற்றும் போனஸ் உள்ளிட்டவை வருமானமாக சேர்க்கப்பட்டுள்ளன.

    அந்தவகையில் ஃபோர்ப்ஸ் பட்டியலின் 10-வது இடத்தில் கிரீஸ் நாட்டின் கூடைப்பந்தாட்ட வீரர் ஜியானிஸ் ஆன்டிடோகூம்போ (GIANNIS ANTETOKOUNMPO) இடம்பிடித்துள்ளார்.

     

    கூடைப்பந்தாட்டத்தில் அமெரிக்காவின மில்வாக்கி பக்ஸ் அணிக்காக விளையாடும் இவரது ஆண்டு வருமானம் இந்திய ரூபாயின் மதிப்பில் 614 கோடி ரூபாய் ஆகும்.

    பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பவர் 40 வயது நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர் ஆவார். டென்னிஸ் உலகில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரர் கடந்தாண்டு 690 கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டியுள்ளார்.

     

    ஃபோர்ப்ஸ் பட்டியலின் நான்காவது இடத்தில் இருப்பவர் பிரேசிலைச் சேர்ந்தவரும் பாரிஸ் லீக் கால்பந்து அணியின் நட்சத்திர வீரருமான நெய்மார் ஆவார்.

    கால்பந்தை எதிர் அணி வீரர்களுக்கு கொடுக்காமல் லாவகமாக கையாளும் திறமை கொண்ட நெய்மாரின் கடந்தாண்டு வருமானம் 722 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

    பட்டியலின் முதல் மூன்று இடங்களில் 100 மில்லியன் டாலர்களில் வருமானம் ஈட்டும் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதில் 3வது இடத்தில், MANCHESTER UNITED அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.

    போர்ச்சுகலைச் சேர்ந்த 37 வயதான ரொனால்டோவின் கால்பந்து திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கின்றனர். கடந்தாண்டு மட்டும் அவர் ஈட்டிய வருமானம் 870 கோடி ரூபாய்.

    இரண்டாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் அசத்தல் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ். ஆறு புள்ளி ஏழு அடி உயரம் கொண்ட இவர், வெகு தூரத்தில் இருந்து அசால்ட்டாக பந்துகளை கூடையில் திணிப்பதில் வல்லவர் ஆவார்.

    லெப்ரான் ஜேம்ஸின் கடந்தாண்டு வருமானம், 920 கோடி ரூபாயாக உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் உலக கால்பந்து சூப்பர்ஸ்டாரான மெஸ்ஸி. கால்பந்து விளையாட்டு உலகில் தனக்கென தன்னிகரற்ற இடத்தை கொண்டுள்ள அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, இந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் என்றே கூறலாம்.

    கால்பந்தாட்டத்திற்காகவே பிறப்பெடுத்தது போல விளையாடும் மெஸ்ஸியின் ஓராண்டு வருமானம், உச்சபட்சமாக ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதேபோல பிரபல விளையாட்டு பத்திரிகையான SPORTICO, டாப் 100 பணக்காரர் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

    அதில், இந்தியாவில் இருந்து ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் அவர் ஈட்டிய மொத்த வருமானம் 261 கோடி ரூபாய் ஆகும்.

    இந்த வருமானத்தில் 238 கோடி ரூபாயை, விளம்பரங்கள் மூலமாகவே விராட் கோலி சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரிவில் நம்பர் ஒன் பணக்கார் வீரர் என்ற பெருமையை விராட் கோலி மட்டுமே பெற்றுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Lion, Virat Kohli

    அடுத்த செய்தி