கோலாகலமாக தொடங்கியது உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர்!

14-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

14-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
14-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கின. இந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர். விழாவின்போது, 1975-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் முதலில் கௌரவிக்கப்பட்டனர்.

தொடக்க விழாவில் நடனமாடிய நடிகை மாதுரி தீட்சித்


வண்ண விளக்குகள் ஒளிர, போட்டிகளை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் தொடக்கி வைத்தார். விழாவில் ஏ.ஆர்.ரகுமான், ஷாருக் கான், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்தொடரின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில் நாளை முதல் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தத் துவக்க விழாவில் ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹாரூக் கான் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.

Also watch
Published by:DS Gopinath
First published: